News April 5, 2025

வளர்ச்சியில் முந்தும் தமிழகம்: CM ஸ்டாலின் பெருமிதம்!

image

தேசிய அளவிலான பொருளாதாரத்தில் TN 9.69% வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியில் கவனம் செலுத்தி இந்த சாதனையை எட்டியிருப்பதாக பாராட்டியுள்ளார். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் விரைந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2025

ஓய்வு குறித்து தோனி பேச்சு

image

நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார். 43 வயதாகும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்” என்றார்.

News April 6, 2025

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார்?

image

உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸியா? ரொனால்டோவா? இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததே இல்லை. இதற்கு தற்போது பதிலளித்திருக்கும் பிரேசில் முன்னாள் வீரர் காகா, மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் எதுவும் மாறிவிடாது. நானும் உலகக் கோப்பை வென்றேன். ஆனால், தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் நான் இல்லை. மெஸ்ஸி ஜீனியஸ் தான். ஆனால், முழுமையான கால்பந்து வீரர் என்றால் அது ரொனால்டோ தான் என்றார்.

News April 6, 2025

இது அப்துல்கலாமின் நிலம்… மோடி உற்சாகம்

image

பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பேசிய PM மோடி, இது மறைந்த EX குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல்கலாமின் நிலம் என மகிழ்ச்சி தெரிவித்தார். அப்துல்கலாமின் வாழ்க்கை, அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை நமக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம், 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.

error: Content is protected !!