News April 5, 2025
முட்டை விலை கடும் சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இரண்டாவது நாளாக 20 காசுகள் குறைந்துள்ளது. இதனால், ₹4.25க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹5 முதல் ₹5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2 நாள்களில் மட்டும் 40 காசுகள் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரில் முட்டை விலை என்ன?
Similar News
News April 6, 2025
அதிமுகவை பிளவுபடுத்த முயற்சி: செல்லூர் ராஜூ

நிர்மலா சீதாராமனை 2வது முறையாக செங்கோட்டையன் சந்தித்த நிலையில், பல்வேறு கருத்துகள் உலா வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், இருவரின் சந்திப்பை பெரிதாக்கி, அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக சந்திப்பு நடந்ததாக இருவரும் சொல்லவில்லை. ஆனால், சிலருக்கு அதை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வரவில்லை என சாடினார்.
News April 6, 2025
ஜியோ பயனர்களுக்கு சலுகை நீட்டிப்பு

IPL-லின் போது JIO தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு JioHotstar-ஐ இலவசமாக வழங்குகிறது. முன்னர் பல ரீசார்ஜ்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீங்கள் ₹100/₹195/₹949 ரீசார்ஜ் செய்தால், சுமார் 90 நாள்களுக்கு இந்த செயலியை இலவசமாகப் பார்க்கலாம். ₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 5GB Data, ₹195க்கு 15GB Data, ₹949க்கு 84 நாட்களுக்கு 2GB Data& அழைப்புகளை பெறலாம்.
News April 6, 2025
பிரதமர் திறந்துவைத்த தூக்கு பாலத்தில் பழுது

பாம்பனில் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் இருப்பதால், அதனை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பனில் பழைய தூக்கு பாலத்திற்கு மாற்றாக ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.