News April 5, 2025
லைன் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் லைன் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 – 25 வயது உடையவர்கள் வரும் மே 3ஆஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News April 6, 2025
காஞ்சி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

காஞ்சி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-044 – 27237424, 27237425, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091, BSNL-1500, டெங்கு காய்ச்சல் உதவி-8098160003, பேரிடர் மீட்பு-04177 -246269, 9442105169. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
News April 6, 2025
காஞ்சிபுரம் கோட்டம் முதலிடம்

காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு தொடர் வைப்பு கணக்கு, பொன்மகன் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பல வித அஞ்சல் கணக்குகள் தொடங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் காஞ்சிபுரம் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
News April 6, 2025
மீனாட்சி அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்

காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலை 6 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். 7ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகம் பக்தர்களால் களைகட்டியது.