News April 5, 2025
குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பம்

வேலூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் இதர சிறு கனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான நடைமுறை வரும் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளமான https://www.mimas.tn.gov.inஇல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
மாடு முட்டி ஒருவர் பலி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் இ.பி. காலனி பகுதியில் நேற்று 81-ம் ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. இதில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் என மொத்தம் 81 மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாடு முட்டியதில் சின்னப்பன் விவசாயி பலியானார். ரயில் மோதி 2 மாடுகள் பலியானது.
News April 13, 2025
மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு..

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாமியாடிய நபர் ஒருவர் வினோதமாக மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.