News April 5, 2025
அதிகாலையில் சரக்கு வாகனம் கோர விபத்து

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:30am சரக்கு வாகனம் (HR38AB2055) தமிழ்நாட்டிற்கு சரக்கு ஏற்றி வந்த நிலையில் சப்பாணிப்பட்டியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள ஹோட்டலில் புகுந்தது. இதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் கிளீனர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Similar News
News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News April 10, 2025
கிருஷ்ணகிரி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343239400
கிருஷ்ணகிரி மாநாகராட்சி ஆணையர் 04344-247666
கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையம் 9445086362
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் 6374714242
கிருஷ்ணகிரி போக்குவரத்து துறை 04343230214
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் 04343236396 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.