News April 5, 2025
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 10ஆம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கு பெறுமாறு தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News August 23, 2025
ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
News August 23, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.