News April 5, 2025
புதுக்கோட்டையில் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிம் சிறப்பு முகாம் நடைபெறும். (SHARE பண்ணுங்க)
Similar News
News August 11, 2025
புதுகை: TNPSC Group 2 & 2A பிரிவில் வேலை! Don’t miss

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <
News August 11, 2025
புதுக்கோட்டை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய சரக கொலை முயற்சி வழக்கில் கைதான நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு குடியிருப்பில் வசிக்கும் பதிவேடு குற்றவாளிகள் பூபதி (30), மணி (எ) பாட்டில் மணி (27), கார்த்திகேயன் (21) ஆகியோர் மீது எஸ்.பி பரிந்துரையில் பேரில் கலெக்டர் அருணா உத்தரவிட்டதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
News August 11, 2025
புதுக்கோட்டை: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<