News April 5, 2025
படப்பையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 27, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
காஞ்சிபுரத்தில் குழந்தை பேறு அருளும் அற்புத கோவில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.