News April 5, 2025

வக்ஃப்: 2 பேர் ஆதரவு.. ஒன்னு ஜி.கே.வாசன்.. இன்னொருவர்?

image

மாநிலங்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக நியமன உறுப்பினர் இளையராஜா வாக்களித்துள்ளார். இவரைத் தவிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே.வாசன் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். அதன்படி தமிழகத்தில் 2 பேர் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அன்புமணி வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

Similar News

News April 22, 2025

அரசியலில் கால் பதிக்கும் சனம் ஷெட்டி

image

நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி, அரசியலில் ஈடுபடுவது குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். X தளத்தில் போஸ்ட் செய்திருக்கும் அவர், தனக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் அரசியலில் ஈடுபட வேண்டுமா என்றும் ஈடுபட்டால், எந்தக் கட்சியில் சேர்வது என்றும் கருத்து கூறுமாறு தனது ரசிகர்களிடம் அவர் கேட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News April 22, 2025

‘அந்த’ விஷயத்தில் முத்துனவங்க யார் தெரியுமா?

image

சின்ன வயதில் முத்துன கத்திரிக்காயாக இருக்கும் நாட்டவர்கள் யார் தெரியுமா? பிரேசில் தானாம். சராசரியாக 17 வயது 3 மாதங்களில் அந்நாட்டு இளைஞர்கள் விர்ஜினிட்டியை இழந்து விடுகிறார்களாம். வளர்ந்த நாடான அமெரிக்காவில் 18 வயது 4 மாதங்களிலும், பிரிட்டனில் 18 வயது 3 மாதங்களிலும் ‘அந்த’ சுகத்தை பெற்று விடுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஒழுக்கமானவர்கள். 22 வயது 5 மாதங்களில் தான் ‘அந்த’ அனுபவம் கிடைக்கிறதாம்.

News April 22, 2025

மஸ்க் தாயாருடன் ஜாக்குலின்

image

எலான் மஸ்கின் தாயார் மே மஸ்க்குடன் இணைந்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மே தான் எழுதிய ‘A Woman Makes A Plan’ புத்தகத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக மும்பையில் உள்ளார். மேயின் புத்தகம், பெண்களுக்கான அடையாள சின்னம் என ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தாயார் இறந்த பின்பு அவர் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறையாகும்.

error: Content is protected !!