News April 5, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

image

காஞ்சிபுரத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்களை பெற்று, மே 1ஆம் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

Similar News

News April 6, 2025

சிறுமியை கொலை செய்த காதலன் கைது

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.

News April 5, 2025

காஞ்சிபுரத்தில் 197 அங்கன்வாடி பணியிடங்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 107 அங்கன்வாடி பணியாளர்கள், 11 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25-35 வயதுடைய பெண்கள்  <>இங்கு கிளிக் செய்து<<>> ஏப்.23-க்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். *நல்வ வாய்ப்பை மிஸ் பண்ணிறாதிங்க. ஆதரவற்ற பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும்

News April 5, 2025

பேருந்தில் ஊர் பெயர், எண் பதிக்க கோரிக்கை

image

அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை எனப்படுகிறது. எனவே, தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை சரியாக எழுத கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!