News April 5, 2025
பிரபல நடிகர் விலாஸ் உஜ்வானே காலமானார்!

பிரபல, இந்தி, மராத்தி நடிகர் விலாஸ் உஜ்வானே(62) காலமானார். சினிமா, சீரியல்கள், மேடை நாடகங்களில் தனது ஆசாத்திய நடிப்பு, கம்பீர குரலால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், 2017இல் Brain Strokeஆல் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு உடல்நல பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், மும்பையில் திடீரென உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். RIP!
Similar News
News April 6, 2025
பாம்பன் பாலத்தின் HYPERLAPSE வீடியோ!!

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனிடையே மண்டபம் ரயில் நிலையம் முதல் பாம்பன் ரயில் நிலையம் வரையிலான HYPERLAPSE வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
News April 6, 2025
பல்லு துலக்கலனா மாரடைப்பு வருமா? என்னய்யா சொல்றீங்க!

இரவு தூங்குவதற்கு முன் பற்களை துலக்காவிட்டால், மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்று ஹார்வார்டில் பயிற்சி பெற்ற டாக்டர் சவுரவ் தெரிவித்துள்ளார். இரவு பல் துலக்காமல் தூங்கும்போது, வாயில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலப்பதாகவும், அது Inflammationஐ ஏற்படுத்தி இதய பாதிப்புகளை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. கவனம் மக்களே…
News April 6, 2025
அப்துல் கலாமின் பொன்மொழிகள்

*ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள். *ஒருவரைத் தோற்கடிப்பது மிகவும் எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினமானது. *என்னைப் பொறுத்தவரை, எதிர்மறையான அனுபவம் என்று எதுவும் இல்லை. *ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.