News April 5, 2025
வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்

மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார். இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாள்களில் காய்ச்சலாகவும், பின்னர் கை, கால் பாதங்களில் கொப்புளங்கள், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, நீரிழப்பு உள்ளிட்டவையும் ஏற்படுகின்றன.
Similar News
News August 11, 2025
மீண்டு எழுந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

கடந்த வாரத்தில் கடும் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,604 புள்ளிகளிலும், நிஃப்டி 24,585 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. Eternal, Reliance, SBI, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?
News August 11, 2025
என் சாவுக்கு 3 பேரு தான் காரணம்.. மாணவி சோக முடிவு

ராகிங் கொடுமை ஒரு கல்லூரி மாணவியின் சாவிற்கு காரணமாகியுள்ளது. கேரளாவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு B.A. படிக்கும் மாணவி அஞ்சலி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு காரணம் இந்த 3 பேர் தான். என்னை மன ரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடைய செய்தது வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்களே’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 3 பேரையும் போலீஸ் விசாரித்து வருகிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல!
News August 11, 2025
வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

கடந்த 8-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் தவறு குற்றம் கிடையாது என IPC கூறுவதை சுட்டிக்காட்டி, இதனை அன்றே கணித்த கம்பர், ராமர் குற்றவாளி இல்லை எனக் கூறியதாகப் பேசியிருந்தார். இந்நிலையில் ராமரை வைரமுத்து அவமதித்துவிட்டதாகக் கூறி புதுச்சேரியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.