News April 5, 2025
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை 4000 போலீசார் பாதுகாப்பு

பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Similar News
News April 5, 2025
பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.
News April 5, 2025
ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் தினசரி விரைவு ரயில் இயக்கம்

ராமநாதபுரத்திற்கு நாளை (ஏப்ரல்.06) முதல் சென்னை தாம்பரத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்துக்கு 16103/04 TBM RMM தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து தினசரி மாலை 6.10 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்திலிருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே தென் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராம்நாடு 08 மில்லி மீட்டர், மண்டபம் 14 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 25.10 மில்லி மீட்டர், பாம்பன் 20.60 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 83.20 மில்லி மீட்டர், திருவாடானை 21.20 மில்லி மீட்டர், தொண்டி 2.60 மில்லி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 40.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.