News April 5, 2025
சங்கரன்பந்தல்: சுகாதார நிலையத்தில் ஆண் சடலம்

மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 5, 2025
மயிலாடுதுறை அருகே அதிசய கிணறு

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலின் கிணறு கடலுக்கு அருகில் உள்ளது. கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்தும் கடல் நீர் அருகில் சூழ்ந்த பிறகும் நீரின் சுவை கொஞ்சமும் மாறவில்லை. தரங்கை மக்கள் இன்றும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்த பிறகு இக்கிணற்றில் மீண்டும் குளிக்க வருகிறார்கள். இது சுவையான நல்ல நீராக இருப்பதால் ஆச்சரியப்பட்டு செல்கிறார்கள்.
News April 5, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு நற்செய்தி

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்திலும், 04364-299790 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.
News April 5, 2025
மயிலாடுதுறையில் வேலை: ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் நோ்முக தேர்வுக்கு ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)