News April 5, 2025
குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா?

வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்கள் மூலம் குழந்தைகளின் இருமலை குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால், அது சளியை மெல்லியதாகவும், வெளியேற்றவும் உதவுகிறது. நீராவி பிடிக்கும் சிகிச்சையின் மூலம் தொண்டை, மார்பில் உள்ள சளியை தளர்த்தலாம். வெதுவெதுப்பான மூலிகை டீ, சூப் அல்லது இஞ்சி தண்ணீர் கொடுக்கலாம்.
Similar News
News April 6, 2025
தோனி ஓய்வில்லை.. பிளெமிங் உறுதி

தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், தோனி இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
News April 5, 2025
ONOE அடுத்த தேர்தலில் அமல்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் (ONOE ) அடுத்த தேர்தலில் அமலாக இருப்பதாக வெளியாகும் செய்திகளை நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், ONOE அமலானால் பெரும் தொகையை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2034க்கு பிறகே ONOE அமல்படுத்தப்படும், சட்டப்பேரவை, மக்களவைக்கு மட்டுமே பொருந்தும், உள்ளாட்சி அமைப்புக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.
News April 5, 2025
ONOE திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு: நிர்மலா சீதாராமன்

ONOE திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ONOE நாட்டுக்கு புதிதல்ல என்றும், 1960ம் ஆண்டுகள் வரை அமலில் இருந்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனுக்காகவே ONOE திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், இதை கருணாநிதி ஆதரித்த நிலையில், அவரின் மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.