News April 5, 2025
தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டில் 41.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 41.40 மில்லியன் டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு 0.77 சதவிகிதம் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது.
Similar News
News April 5, 2025
9 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வின்சென்ட் என்ற விசாரணை கைதி மரணம் அடைந்தார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருக்கும் ராமகிருஷ்ணன் உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
News April 5, 2025
தூத்துக்குடி : போக்சோ வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22). இவர் 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆழ்வார் திருநகரி போலீசார் போக்சோ வழக்கு தொடர்ந்ததனர். இதில் இவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
News April 5, 2025
தூத்துக்குடி: பிரபல நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<