News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News January 16, 2026
நீரிழிவு நோயாளிகள் இதை செய்யலாமா?

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுவதை ‘இடைப்பட்ட விரதம்’ என்று அழைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் இந்த விரதத்தை பின்பற்றுவது உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, ஒரே நேரத்தில் அதிகளவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இந்த ரிஸ்க்கை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News January 16, 2026
இங்கு ஆண்களுக்கு முற்றிலும் தடை

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம், நல்ல சினாரியோவ ரசிக்கலாம், ஆனா நம்ம மட்டும் தான் அங்க இருக்கணும் என்ற நினைப்பில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக இடம்தான் இந்த சூப்பர்ஷி தீவு. பின்லாந்தில் உள்ள இந்த தீவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்களுக்கு தடை தான். எனவே, பெண்கள் தங்களை தாங்களே உணர்ந்துகொண்டு விரும்பிய உணவுகளை சாப்பிட்டபடியே பொழுதை கழிக்கலாம். யாரெல்லாம் ரெடியா இருக்கீங்க?
News January 16, 2026
வீடு வாங்க போறீங்களா? Must Read this

மத்திய பட்ஜெட் 2026-ல் மலிவு விலை வீடுகள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை ரியல் எஸ்டேட் துறையினர் முன்வைத்துள்ளனர். தற்போதைய ₹45 லட்சமாக உள்ள மலிவு விலை வீடுகளின் வரம்பை ₹75-₹95 லட்சமாக உயர்த்த வேண்டும், வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். மேலும், வீட்டுக் கடன் மீதான வட்டி விலக்கை, ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


