News April 5, 2025
1 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்ட நாயகன் விருது

MIக்கு எதிரான நேற்றைய போட்டியில், LSG பவுலர் திக்வேஷ் சிங் ரதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசி 21 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். குறிப்பாக MI வேகமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததை கட்டுப்படுத்தி, 24 பந்துகளுக்கு 46 ரன்கள் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நமன் திர்ரை அவர் அவுட்டாக்கினார். இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றது.
Similar News
News April 7, 2025
SHARE MARKET: ஒரே நாளில் ₹19 லட்சம் கோடி ஸ்வாகா…!

வாரத்தின் முதல்நாளே தலையில் துண்டுபோடும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் அனைத்துத் துறைகளின் பங்குகளும் ரெட் (சரிவு) சிக்னலாகவே உள்ளன. சென்செக்ஸ் (-2,542), நிப்ஃடி (-810) கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், ₹19 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஆசியா முழுவதுமே பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
News April 7, 2025
தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண்ணுக்கு சோகம்

இந்தியாவை சுற்றிப் பார்க்க ஆசையாய் வந்த வெளிநாட்டு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தாஜ்மஹாலில் நடந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளம்பெண்(28), தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றபோது, தொடக்கூடாத இடங்களில் தொட்டு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சிசிடிவி காட்சி மூலம் ஆக்ராவைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 7, 2025
நொந்து போய் உள்ள ADMK தொண்டர்கள்தான் தியாகிகள்

டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் CM ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி.. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்துள்ளனர் எனவும் சாட்டியுள்ளார்.