News April 5, 2025
வக்ஃப் விவகாரம்: தர்ம சங்கடத்தில் நிதிஷ்குமார்

வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்ததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் JDU கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவர் டாப்ரெஷ் ஹசன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இதுவரை 5 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல் NDA கூட்டணி கட்சியான உ.பியின் ராஷ்டீரிய லோக் தளத்தில் இருந்தும் ஷாஜாய்ப் ரிஷ்வி என்ற நிர்வாகி விலகியுள்ளார்.
Similar News
News September 19, 2025
அரைமணி நேரத்தில் விஜய் பேச்சை முடிக்க நிபந்தனை

திருச்சியை போல நாகையிலும் 23 நிபந்தனைகளுடன் விஜய்யின் பிரசாரக் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. அரைமணி நேரம் மட்டுமே விஜய் பேச வேண்டும், விஜய்யின் வாகனத்தை பின் தொடரக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீஸ் விதித்துள்ளது. தவெகவின் கோரிக்கையை ஏற்று புத்தூர் அண்ணா சிலை அருகே பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்துள்ளது. பிரசாரம் குறித்து நேற்று <<17749723>>கோர்ட் <<>> தவெகவுக்கு எச்சரிக்கையும் கொடுத்திருந்தது.
News September 19, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(செப்.19) ஒரே நாளில் கிராமுக்கு 2 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
போனில் Bank App யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை…!

அனைவரும் ஃபோனில் பேங்க் ஆப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இந்த விஷயங்களை செய்தால் பேங்கில் உள்ள உங்கள் பணம் திருடுபோகாமல் தடுக்கலாம். ➤பொது வெளியில் இருக்கும் Wifi-ல் பேங்கிங் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டாம் ➤செல்போனை சர்வீஸுக்கு கொடுக்கும்போது பேங்கிங் ஆப்-ஐ Uninstall செய்யுங்கள் ➤அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்டை வைக்காதீங்க. SHARE.