News April 5, 2025
நல்லா தூங்குங்க பாஸூ!

தூக்கம் – இந்த ஒற்றை வார்த்தை தான் நம்மை இயக்குகிறது. தூக்கமே வரலப்பா என்று அவதிப்படுவோரும், எப்போ பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது என்று புலம்புவோரும் அதிகம். தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட, மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு கிடைக்கவே, இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை தவிர்க்கலாமா?
Similar News
News October 30, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹90,600-க்கு விற்பனையான நிலையில், இன்று(அக்.30) ₹200 குறைந்துள்ளது. இன்றைய தினம் காலையில் சவரனுக்கு ₹1,800 குறைந்தது, ஆனால் மாலையில் மீண்டும் ₹1,600 அதிகரித்தது. ஆனாலும் கூட நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 22 கேரட் கிராமுக்கு ₹25, சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
News October 30, 2025
USA தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு

ஈரான் சபாஹர் துறைமுகம் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியாவிற்கு 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபாஹர் துறைமுகமானது இந்தியா – ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும். இதில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது.
News October 30, 2025
யார் இந்த புதிய CJI சூரியகாந்த்?

53-வது CJI-ஆக நியமிக்கப்பட்டுள்ள <<18152053>>சூர்யகாந்த்<<>>, ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 1984-ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர். இமாச்சல் தலைமை நீதிபதியாகவும், ஹரியானா & பஞ்சாப் ஐகோர்டில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர். வரும் நவ., 24 முதல் 2027 பிப்., 9-ம் தேதி வரை CJI-ஆக பணியாற்ற உள்ளார். அரசியல், தேர்தல் நடைமுறை சார்ந்த பல முக்கிய வழக்குகள் இவரது பணிக்காலத்தில் விசாரிக்கப்பட உள்ளது.


