News April 4, 2025
நான் ஒரு புலி… யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்

தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட் கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியாய் இருப்பதைவிட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து சாவது மேல். நான் சிங்கமும் இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னா செய்யாமை ▶குறள் எண்: 31▶குறள்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
News April 19, 2025
3 அமைச்சர்களை டார்கெட் செய்யும் அதிமுக

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக சமீபத்தில் அதிமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த மூன்று அமைச்சர்கள் விவகாரங்களை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் அதிமுக தீவிரமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக முதல்வருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.
News April 19, 2025
இது என்னடா புது கதையா இருக்கு.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு

திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஆம்! திருமணம் செய்து கொள்வதால், நினைவாற்றல் பாதிக்கப்பட (Dementia)வாய்ப்புள்ளதாக ஃப்லோரிடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருமணமாகாதவர்கள் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.