News April 4, 2025
₹17.8 லட்சம் கோடியை இழந்த உலக பணக்காரர்கள்

ஏறக்குறைய ஒரு வர்த்தக போரையே தொடங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரது புதிய வரிவிதிப்பு அமலான முதல் நாளே, உலக பணக்காரர்கள் விழிபிதுங்கியுள்ளனர். இன்று மட்டும் ₹17.8 லட்சம் கோடியை அவர்கள் இழந்துள்ளனர். இதில், முக்கியமாக மார்க் ஜுக்கர்பெர்க் ₹1.53 லட்சம் கோடியும், ஜெஃப் பெசோஸ் ₹1.36 லட்சம் கோடியையும் எலான் மஸ்க் ₹94 ஆயிரம் கோடியையும் இழந்துள்ளனர். இன்னும் என்னென்ன நடக்குமோ?
Similar News
News January 13, 2026
குமரியில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.15 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சுற்றுலா மையங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, லெமூர் கடற்கரை, சொத்த விளை, சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மற்றும் பொது இடங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News January 13, 2026
SBI வாடிக்கையாளர்களுக்கு SHOCK!

SBI வங்கி ஏடிஎம் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. SBI வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் ₹23+GST வசூலிக்கப்படும். சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு 10 பரிவர்த்தனைகள் வரை இலவசம். உங்கள் பேலன்ஸை செக் செய்தாலோ அல்லது மினி ஸ்டேட்மெண்ட் பெற்றாலோ ₹11 கட்டணமாக வசூலிக்கப்படும். SHARE.
News January 13, 2026
’பராசக்தி’ பார்த்து அழுதேன்: மன்சூர் அலிகான்

’பராசக்தி’ திரைப்படம் ஹிந்தி திணிப்பை பற்றி இளைஞர்களுக்கு தெரியப்படுத்த உதவியாக இருப்பதாக மன்சூர் அலிகான் பேசியுள்ளார். இப்படத்தில் அனைத்தையும் காட்டாமல் வெறும் 10% தான் காட்டியிருக்கிறார்கள் என்ற அவர், அதற்கே சென்சார் போர்டு ஏகப்பட்ட கெடுபிடி செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் இப்படத்தை 5 முறைக்கு மேல் பார்த்து அழுதுவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.


