News April 4, 2025
அதிரடியாக குறையும் தங்கம், வெள்ளி விலை

மற்ற நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரியால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 68 டாலர்கள் (1.8%) குறைந்து 3,046 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. வெள்ளியின் விலை 1.68 டாலர்கள் (5.3%) குறைந்து 3.22 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், இந்திய சந்தையில் நாளை தங்கம் விலை சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 17, 2025
கைது செய்யப்பட்ட 2-வது நாளே சிறையில் மர்ம மரணம்!

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தார். இவர், கடந்த 2012-ல் மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2-வது நாளே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பதற்றமாக சூழல் நிலவுகிறது.
News October 17, 2025
மழையில் இந்த 5 பொருள்களை ரெடியா வெச்சிக்கோங்க!

மழை சீசனில் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமானதாகும். இந்த பொருள்கள், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். அப்படி மழையின் போது நாம் ரெடியாக வைத்திருக்க வேண்டிய 5 பொருள்களை மேலே படங்களாக கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணி பார்க்கவும். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.
News October 17, 2025
171 நாள்களுக்கு பிறகு EPS தான் முதல்வர்: நயினார்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போக்குவரத்து ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் என யார் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் நயினார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக ஆட்சியின் முடிவு நாளை மக்கள் எண்ணிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 171 நாள்களுக்குப் பிறகு நம்ம(NDA) ஆட்சி மலரும் எனவும், EPS முதல்வராவார் என்றும் சூளுரைத்தார்.