News April 4, 2025
மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தருவைகுளம் சேர்ந்த 25 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 18, 2025
தூத்துக்குடி சுற்றுலா தலமான முத்தாரம்மன் திருக்கோயில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 20கி.மீ தொலைவில் குலசேகரபட்டினத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்கக் கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது.இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாப்படுகிறது.கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களில் உருவங்கள் வேடம் அணிந்து பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மனை வழிபடுகின்றனர்
News April 18, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
News April 17, 2025
11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 11துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், புதூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த 11 பேரை நேற்று இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.