News April 4, 2025
வருகிறது AI காண்டம்ஸ்…

ஏப்.1-ம் தேதி, ‘Dot AI by Manforce Condoms’ என்ற விளம்பரம் இணையத்தில் புயலைக் கிளப்பியது. இந்த ஆணுறையில் மைக்ரோ, நானோ சென்சார்கள், டாட் அளவை விருப்பம்போல் மாற்றும் அம்சம், இவற்றுடன் அந்தரங்க செயல்பாட்டை அளவிடும் AI உள்ளது எனவும், அது பெர்பாமன்ஸை மேம்படுத்த டிப்ஸ் கொடுக்கும் என்றெல்லாம் சொன்னதே இதற்கு காரணம். ஆனால், இதெல்லாம் future-ல் வரும். இப்போதைக்கு april fool fun தான் என்கிறது அந்நிறுவனம்.
Similar News
News April 15, 2025
அலர்ட்: Toilet-ல் Phone யூஸ் பண்றீங்களா?

டாய்லெட்டில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் பல நோய்கள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், Posture பிரச்னைகள் வரக்கூடும். குடல், இரைப்பை சார்ந்த நோய்கள், வயிற்றுப்போக்கு, மூல பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. மேலும், கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் ஒட்டிக் கொள்வதால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்களை ஏற்படுத்தும்.
News April 15, 2025
என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
News April 15, 2025
ஒரு டாய்லெட் பிரச்னையால் ₹29.16 கோடி செலவு

போயிங் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டாய்லெட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். டாய்லெட்டின் தாழ்ப்பாள் பழுதானதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த USA விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து போயிங் விமானங்களின் பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ₹29.16 கோடி செலவில் 2,612 விமானங்களின் டாய்லெட் தாழ்ப்பாளை மாற்ற போயிங் முடிவு செய்துள்ளது.