News April 4, 2025
பாலியல் வழக்கில் சிக்கிய ‘ஸ்குவிட் கேம்’ நடிகர்

நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘ஸ்குவிட் கேம்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருப்பவர் 80 வயது தென்கொரிய நடிகர் ஓ இயோங்-சு. ஆனால், தனது 80 ஆண்டு வாழ்க்கையில் சேர்த்த நல்ல பெயர், ஒரே கணத்தில் பாழாகிவிட்டதாக இவர் புலம்புகிறார். காரணம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டு வன்கொடுமை செய்த வழக்கில், அந்நாட்டு கோர்ட் இவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Similar News
News April 19, 2025
ராசி பலன்கள் (19.04.2025)

➤மேஷம் – ஆதாயம் ➤ரிஷபம் – சாந்தம் ➤மிதுனம் – வரவு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – சுபம் ➤கன்னி – லாபம் ➤துலாம் – நலம் ➤விருச்சிகம் – இரக்கம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – அமைதி ➤கும்பம் – உதவி ➤மீனம் – பயம்.
News April 19, 2025
909 வீரர்களின் சடலங்களை ஒப்படைத்த ரஷ்யா: உக்ரைன்

909 வீரர்களின் சடலங்களை ரஷ்யா ஒப்படைத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியானபோதும் போர் முடிவுக்கு வரவில்லை. அண்மையில் இருதரப்பும் வீரர்கள் சடலங்களை பரிமாறியபோது 909 வீரர்கள் சடலங்களை ரஷ்யா அளித்ததாகவும், தங்கள் தரப்பு 43 சடலங்களை ஒப்படைத்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
News April 19, 2025
IPL: PBKSக்கு 96 ரன்கள் இலக்கு

நடப்பு ஐபிஎல் போட்டியில் PBKS அணிக்கு RCB அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியின், தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிம் டேவிட் மட்டும் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். PBKS பவுலர்களின் அதிரடியால், RCB 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே குவித்தது.