News April 4, 2025

சுக்கிரப் பெயர்ச்சியால் செல்வம் கொழிக்கும் ராசிகள்…!

image

ஏப்.15-ல் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சுக்கிரன் இடம்பெயர்கிறார். இதனால், 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மிதுனம்) நிதிச் சிக்கலுக்கு தீர்வு, பதவி உயர்வு கிடைக்கும். *கும்பம்) பணவரவுகள் அதிகரிக்கும், லக்‌ஷ்மி கடாட்சம் உறுதியாக இருக்கும். *கடகம்) வியாபாரத்தில் வளர்ச்சி. சொந்த வீடு, வாகன கனவுகள் நனவாகும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Similar News

News September 20, 2025

GST வரி குறைப்பு ஒரு புரட்சி: FM

image

GST வரி குறைப்பால் மக்களின் கையில் ₹2 லட்சம் கோடி இருக்கும் என FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு வளர்ச்சியடைய PM தொலைநோக்குடன் செயல்பட்டு வருவதாகவும், GST வரியை குறைத்து நாடகம் ஆட வேண்டிய அவசியம் PM, BJPக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். GST வரி குறைப்பை ஒரு புரட்சி எனக் குறிப்பிட்ட FM, வரி குறைப்பால் மக்கள் நிறைய பொருட்கள் வாங்குவார்கள், வேலைவாய்ப்பு உருவாகும் என்று பேசினார்.

News September 20, 2025

வெற்றியை கொண்டாடி, வீரர்களை மதிக்க தவறுகிறோம்

image

அண்மையில் ஆசியக் கோப்பை வென்ற இந்திய அணியை நாம் எப்படி நடத்தினோம் தெரியுமா? அணியின் வெற்றியை பெருமையாக கொண்டாடிய நாம், வீரர்களை கண்டுகொள்ளவில்லை. ஹாக்கியில் man of the match வென்றால் பரிசுத்தொகை வெறும் ₹16,800 தான். ஆசியக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகை ₹2.6 கோடியாம். ஹாக்கி விளையாட்டோ அரசு நிதி ஒதுக்கீட்டுக்காக காத்துக் கிடக்க, கிரிக்கெட்டோ பில்லியன் டாலர் டீலிங்கில் செழிக்கிறது. உங்க கருத்து?

News September 20, 2025

19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை வந்தா லைக் பண்ணுங்க.

error: Content is protected !!