News April 4, 2025

நகைக்கடன் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி ஆணை!

image

நகைக்கடன் விதிகளை மாற்றியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வட்டியை மட்டும் செலுத்தி நகைக் கடன்களை புதுப்பிக்கும் முறையை ரிசர்வ் வங்கி அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

image

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.

News September 20, 2025

தமிழகம் தலைகுனிந்து நிற்க DMK தான் காரணம்: EPS

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று EPS பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசு ஹாஸ்பிடல்களின் நிலையை சுட்டிக்காட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைகளை பார்ப்பதைவிட மாரத்தான் ஓடுவதில் தான் குறியாக இருப்பதாக விமர்சித்தார். மேலும், இப்போது திடீரென தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என CM சொல்வதாகவும், ஆனால், 2ஜி ஊழலால் ஏற்கனவே தமிழகம் தலைகுனிந்துதான் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

News September 20, 2025

ரேபிஸ் தடுப்பூசி போட்டும் உயிரிழப்பது ஏன்?

image

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ரேபிஸ் தடுப்பூசி போட்டும், உயிரிழந்தது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டில் 3.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தடுப்பூசி வேலை செய்யவில்லை என கூற முடியாது எனவும், உயிரிழந்தவர்கள் முறையான சிகிச்சை பெற்றனரா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!