News April 4, 2025

நாளை மின்வாரிய சிறப்பு முகாம்

image

தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT

Similar News

News April 18, 2025

மாரடைப்பு: கிரிக்கெட் மைதானத்தில் நடுவர் மரணம்

image

கிரிக்கெட் போட்டியின் இடையே நடுவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாமா கோப்பை போட்டியில் KRP XI CC மற்றும் Crescent CC அணிகள் மோதின. 11ஆவது ஓவரின்போது நடுவர் பிரசாத் மல்காஓங்கர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 18, 2025

மின்சார ரயில் பயணிகளுக்கு குளு குளு குட் நியூஸ்..

image

சென்னையில் நாளை முதல் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 7 மணிக்கு குளிர்சாதன மின்சார ரயில் சேவை தொடங்குகிறது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் மக்களுக்கு இனிப்பான செய்தியை தெற்கு ரயில்வே கொடுத்துள்ளது.

News April 18, 2025

நடிகர் ஸ்ரீ ஹாஸ்பிடலில் அனுமதி: குடும்பத்தினர்

image

நடிகர் ஸ்ரீ, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் ஸ்ரீ-யின் தனி மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ஸ்ரீ குறித்த நிலை தெரியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!