News April 4, 2025
மோடியின் இலங்கை பயணம்.. 11 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 18, 2025
BED-ல் இதை செய்யாதீங்க

நம்மில் பலரும் BED-ல் ஈர டவலைப் போட்டுவிட்டு கண்டுக்காமல் சென்று விடுகிறோம். ஆனால் இதனால் கிருமி உண்டாகி, BED-லிலும், படுக்கை விரிப்பிலும் வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லை, நமது உடலிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர். வெளியில் இருந்து வந்து கால்களை சுத்தம் செய்யாமல் படுக்கைக்கு செல்வதும் உடல்நலனை பாதிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
News April 18, 2025
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் OPS

தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
News April 18, 2025
அஜித்துக்கு இம்மாத இறுதியில் பத்மபூஷண் விருது

கலை, சமூகம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக விளங்குவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. தமிழகத்தில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷணும், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை இம்மாத இறுதியில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.