News April 4, 2025
கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.
Similar News
News April 18, 2025
100 இளம்பெண்கள் நிர்வாணம்.. வீடியோக்களால் போலீஸ் ஷாக்

AP-ஐ சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவுக்கு பெங்களூரில் கால் சென்டர் வைத்துள்ள லூயிசுடன் பழக்கம் ஏற்பட்டது. 3 பேரும் கால்சென்டர் வரும் பெண்களிடம் ஆசைக்காட்டி, நிர்வாண வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்துள்ளனர். இதையறிந்த போலீஸ், 3 பேரையும் கைது செய்து 100 இளம்பெண்கள் நிர்வாண வீடியோவை கைப்பற்றியுள்ளனர். எனவே இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையா இருங்க!
News April 18, 2025
மே 13-ம் தேதி சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், மே 12 அல்லது மே 13-ம் தேதி வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுகள் முடிந்த நிலையில், முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே 12, மே 13ம் தேதிகளில் வெளியானது. அதனால் இந்த ஆண்டும் அதே தேதியிலேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. SHARE IT.
News April 18, 2025
அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. அரசாணை வெளியீடு

30 ஆண்டுகளாக ஒரே அரசு பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அரசாணை வெளியாகியுள்ளது. TN நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1998ம் ஆண்டு அரசாணை, 2009, 2017ம் ஆண்டு அரசாணைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர், பணியிட இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் போனஸ் உயர்வு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.