News April 4, 2025
பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
புதுச்சேரி: தீபாவளி முன்னிட்டு ரூ.1000 போனஸ்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.
News October 19, 2025
புதுச்சேரி ஆளுநர் தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை, சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.
News October 19, 2025
புதுச்சேரி: மாநில காங்கிரஸ் தலைவரின் தீபாவளி வாழ்த்து

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தீபாவளி வாழ்த்து செய்தியில். தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா, தெய்வீகத்தின் ஆதரவு மற்றும் வெற்றியை குறிக்கும் விழா. தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் ஒரு பண்டிகையும் ஆகும். இல்லத்தில் விளக்குகள் ஏற்றி ஒளியை பரப்புவதை போல், நம் உள்ளத்திலும் தீய எண்ணங்கள் கொண்ட இருளை அகற்ற அறம் என்ற ஒளியை ஏற்றுவோம் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.