News April 3, 2024
ஐ.நா., சபையில் நிரந்தர இடம் கிடைக்கும்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், காஸா விவகாரத்தில் ஐ.நா.வால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை எனக் கூறிய அவர், ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக உலகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது என்றார். மேலும், அதற்கான வேலைகளில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, எகிப்து நாடுகள் ஈடுபடுவதாகவும் கூறினார்.
Similar News
News November 1, 2025
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: EPS

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; தற்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நெருஞ்சில் முள்ளாக இருந்த சிலரை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்து கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள்தான் என்று செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டார்.
News November 1, 2025
நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது. *பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும் (முன்பு ₹50) *கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம் (முன்பு ₹100), *வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளை பெற, முதல் நபருக்கு ₹700 & அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350 கட்டணம் வசூலிக்கப்படும்.
News November 1, 2025
MP கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சிக்கல்!

INX மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ₹16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ₹7 கோடி பணத்தையும் முடக்கி ED நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் PMLA தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவில், சொத்துகளை முடக்கிய ED நடவடிக்கை செல்லும் என்று கூறி, கார்த்தி சிதம்பரத்தின் வாதத்தை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


