News April 4, 2025
மூன்று அணிகளாக த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் த.வெ.க பொறுப்பாளர் அஜிதா தலைமையில் முதலில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அதே இடத்தில தவெக பிரமுகர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜ் அணியினரும், அதனையடுத்து முருகன் அணியினர் என மூன்று அணியினர் இன்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Similar News
News April 5, 2025
தூத்துக்குடி: பிரபல நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
News April 5, 2025
ரவுடிகளை கண்காணிக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை பற்றியும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருளகடத்தலை தடுப்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
News April 5, 2025
குழந்தைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தவோ 18 வயது வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான பணியில் அமர்த்தவோ கூடாது என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவது உடன், 6 மாத முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனைக்கும் வாய்ப்புள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.