News April 4, 2025
திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS
Similar News
News November 12, 2025
திருவள்ளூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News November 12, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி உதவி பெரும் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். வரும் (நவ-15) ஆம் தேதிக்குள் தங்களது நில உடமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


