News April 4, 2025
இன்று 16 மாவட்டங்களில் கனமழை

மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழையும், சென்னையில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Similar News
News April 18, 2025
திறப்பு விழா காணும் விழிஞ்ஞம் துறைமுகம்

கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தை வரும் மே 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். அதானி குழுமத்தின் முதலீட்டில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட பணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் வகையில் கடந்த ஆண்டு முதற்கட்ட பணிகள் முடிந்தன. சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து வெறும் 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.
News April 18, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

*பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News April 18, 2025
காலமுறை ஊதியம் வழங்குக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பெருமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது இரவு, பகல் பாராமல் உழைக்கும் கிராம உதவியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.