News April 4, 2025

ரஹானே – ஜெய்ஸ்வால் இடையே மோதலா?

image

மும்பை அணியின் கேப்டன் ரஹானேவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, <<15968321>>ஜெய்ஸ்வால் <<>>அணி மாறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெளியாகும் செய்திகளின்படி, ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக, ஜெய்ஸ்வால் சரியாக விளையாடாததை தொடர்ந்து, அவரை கேப்டன் ரஹானே மற்றும் அணியின் கோச் சால்வி விமர்சித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்ஸ்வால், ரஹானேவின் ‘கிட்’ பேக்கை எட்டி உதைத்தார் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News April 18, 2025

இளம் நடிகரும், பாடகருமான மிசுகி இடகாகி மரணம்

image

பிரபல நடிகரும், பாப் பாடகருமான மிசுகி இடகாகி(24) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜப்பான், தென் கொரியாவில் ஜே-பாப் பாய் குழுவில் ஏராளமான பாடல்கள் பாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்த மிசுகி, பிரபலமான Teman Girls, Heart Beats, The Blue Skies at Your Feet உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #RIP

News April 18, 2025

இதுக்கு நீங்க ஒரு பதில் சொல்லுங்க?

image

தனது காதலி தன்னை விட 22 வயது மூத்தவர் என்பதைக் கண்டுபிடித்த இளைஞர் ஒருவர் மனமுடைந்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. ‘எனக்கு 26 வயது. 4 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலிக்கிறேன். சில நாள்களுக்கு முன்பு தான் அவளுக்கு 48 வயது என்பதை கண்டுபிடித்தேன். பார்க்க அவள் வயதானவளாக தெரியவில்லை. லேப்டாப்பில் அவளின் பாஸ்போர்ட்டைப் பார்த்தே இதைக் கண்டுபிடித்தேன். நான் இப்போது என்ன செய்யணும்’ என அவர் கேட்கிறார்.

News April 18, 2025

திருமணத்தை மீறிய உறவு: ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

image

ஆணும், பெண்ணும் தங்களது திருமண உறவை மீறி பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பிபாஸ் ரஞ்சன் அமர்வு, தொடக்கத்திலிருந்தே சம்மதத்துடன் நடந்த உடலுறவு, வாக்குறுதியின் பேரில் ஏமாற்றமாக கருத முடியாது என்பதால் ஆண் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!