News April 4, 2025

தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 18, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டுகள்

image

சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.

News April 18, 2025

தூத்துக்குடியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரி பிரிவில் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஏப்.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 18, 2025

சிறந்த கூட்டுறவு பாடலுக்கு ரூ.50,000 பரிசு

image

தூத்துக்குடி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்டுறவு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் பாடல் போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவு பற்றி 5 நிமிடம் ஒளிபரப்ப கூடிய பாடலை இசை உடன் அமைத்து வரும் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!