News April 4, 2025
விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
விருதுநகர் அருகே கொலையா?

விருதுநகர் டி.சி.கே. பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பஜார் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். இவர் அடித்து கொலை செய்யப்படார? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தார என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சிவகாசி அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்

சிவகாசியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருகின்றனர். அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருவதால் நீண்ட வரிசைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.
News November 2, 2025
சிவகாசியில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகாசியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று(நவ.02) நடைபெற உள்ளது. SBJ கண் மருத்துவமனை & புதுத்தெரு 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் சேவுகன் இணைந்து நடத்தும் இந்த முகாம் புதுத்தெரு பேச்சிமுத்து காம்ப்ளக்ஸ் அருகில், 46வது வார்டு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதால் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


