News April 4, 2025
மதுரை மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்திற்கு மேல் தெரு நாய்கள்

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யாதது ஆண் பெண் நாய்கள் மாநகராட்சி எந்த மண்டலத்தில் அதிக நாய்கள் உள்ளன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ன என்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கீடுகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் விலாவாரியாக முழுமையான கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Similar News
News April 5, 2025
மதுரையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். <
News April 5, 2025
மதுரையில் ஏப்.10ம் தேதி டாஸ்மாக் இயங்காது

மதுரையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News April 5, 2025
மதுரை மாவட்ட ரோந்து காவலர்கள் விபரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (04.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படின் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் 100 இல் தொடர்பு கொள்ளலாம்