News April 4, 2025
சமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொடூரக் கொலை

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் தர்காவிற்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அவர் குலசேகரபட்டினம் தர்கா அருகே கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
தூத்துக்குடி: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
தூத்துக்குடி: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த செப்டம்பர் மாதம் வல்லநாடு அருகே பொது சொத்தை சேதப்படுத்தியதாக பாறை கூட்டத்தைச் சேர்ந்த இசக்கி துரை என்பவரை வல்லநாடு போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில் இசக்கி துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இசக்கி துரையை வல்லநாடு போலீசார் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


