News April 4, 2025
பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய சின்னமாக இருந்தவர் எனவும் தனது தேசபக்தி ஆர்வத்தினை திரைப்படங்களில் பிரதிபலித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உன்னத கலைஞர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த நடிகர் மனோஜ் குமார், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 18, 2025
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
News April 18, 2025
அண்ணா யுனிவர்சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சல்லடை போட்டு சோதனையிட்டனர். இறுதியில் வெறும் புரளி என தெரியவந்தது. இமெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 18, 2025
புனித வெள்ளி (Good Friday) கொண்டாடப்படுவது ஏன்?

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கடைப்பிடிக்கிறோம். புனித வெள்ளியில் (Good Friday) இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்கிறோம். பகைவர்களை நேசிக்க சொன்ன இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டார்.