News April 4, 2025
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 குறைந்தது

தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,280 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,400க்கும், சவரன் ₹67,200க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் திடீரென சரிவைக் கண்டுள்ளது. இது, நகை வாங்க நினைத்தவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உலக நாடுகள் மீதான USA வரி விதிப்பால் அந்நாட்டின் பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 21, 2025
இன்று IND vs PAK: வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் போனது, தொடரை விட்டு வெளியேறுவோம் என பாக்., மிரட்டியது என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. லீக் போட்டியில் தோற்றதற்கு பாக்., பழிதீர்க்குமா அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News September 21, 2025
தமிழகத்தில் 5 நாள்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார்

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று CM ஸ்டாலின் போலியாக சூளுரைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். TN-ல் கடந்த 5 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
News September 21, 2025
இதை செய்ய உங்கள் நாள் சிறப்பாகும்

நமது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காலை எழுந்தவுடன் அதை நாம் எவ்வாறு அணுகுகிறோமோ அதை வைத்தே அன்றைய பொழுதானது நல்லதொரு பொழுதாக அமைகிறது. அப்படி எழுந்தவுடன் அவசியம் செய்ய வேண்டிய சில பழக்கங்களை மேலே புகைப்படங்களில் பார்க்கலாம்.