News April 4, 2025
சீர்வரிசை தட்டுடன் தாசில்தாரிடம் மனு

உளுந்துார்பேட்டையில், உடையானந்தல், டி.ஒரத்தூர், பா. கிள்ளனுர் கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை, கணினி சிட்டாவாக பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தாசில்தாரிடம் சீர்வரிசை தட்டுடன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 13, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

கள்ளக்குறிச்சி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 13, 2026
கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை உயர்வு!

கள்ளக்குறிச்சியில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, இதுவரை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கோப்பை தேநீர், தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வால் அன்றாடப் பயன்பாட்டிற்கு உணவகங்களை நாடும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


