News April 4, 2025
ஆம்னி பேருந்து மீது மோதி: காவலர் பலி

ஆலந்தூர் அருகே உள்ள ஆசர்கானா பகுதியில், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் (SI) சிவகுமார் (53) நேற்று (ஏப்ரல் 3) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 18, 2025
செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.
News April 18, 2025
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 044-27426020, 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்
News April 18, 2025
மாமல்லபுரத்தில் ஒருநாள் இலவச அனுமதி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்