News April 4, 2025
திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE
Similar News
News September 17, 2025
திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையின் உத்தரவு படி தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காலை வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி தலைமை ஆசிரியர் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் திரும்ப சொல்லி உறுதியேற்றனர்.
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

திருவாரூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த<