News April 4, 2025
‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ போஸ்டர்

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான். இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News April 5, 2025
உருவாகிறது ‘புதிய மதம்’

உலகில் வாழும் 3 மதங்களை இணைத்து ஒரே மதமாக உருவாக்கும் முயற்சி நடந்து வருதாக இமாம் அமைப்பின் தலைவர் இலியாஸி தெரிவித்துள்ளார். முஸ்லிம், யூதர், கிறிஸ்தவர்களை கொண்டு ‘நம்பிக்கை’ என்ற புதிய மதம் உருவாக்கப்படும். 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம்தான். வழிபாட்டு முறைகள் நிச்சயமாக வேறுபட்டவை; ஆனால் அனைத்தும் ஒன்றுதான். இறைவன் ஒருவனே! என்பது முக்கிய கொள்கை. இதனால் மோதல்கள் குறையும் எனக் கூறியுள்ளார்.
News April 5, 2025
வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்

மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார். இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாள்களில் காய்ச்சலாகவும், பின்னர் கை, கால் பாதங்களில் கொப்புளங்கள், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, நீரிழப்பு உள்ளிட்டவையும் ஏற்படுகின்றன.
News April 5, 2025
தக்காளி காய்ச்சலை தவிர்க்க சுகாதாரம் அவசியம்

தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எனவே, எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது மிக அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம். இந்த காய்ச்சல் ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை பெறவும். இத்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைக்கக்கூடாது.