News April 4, 2025
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?

ஏப்.6ம் தேதி PM மோடியை, EPS, OPS சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக அவரை சந்தித்தாலும், பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக சக்திகளையும் ஒன்றிணைப்பது, அதனால் ஏற்படும் சாதகம் & பாதகம், கட்சி அதிகாரம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெ., மறைவிற்கு பின், பிரிந்து கிடந்த OPS- EPS-ஐ மோடி தான் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
News April 7, 2025
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.
News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.