News April 4, 2025

குடிநீர் கேட்டு மாணவியர் போராட்டம் – சீமான் ஆவேசம்

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களால் தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Similar News

News April 12, 2025

மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 5ஆம் இடம்

image

தருமபுரி மாவட்டம் NMMS தேர்வில் 387 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளது.மேலும் புதியதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர் தலைமையின் கீழ் இயங்கும் தருமபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 16 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

News April 12, 2025

தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும் என ஆட்சியர் சதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

பங்குனி மாத சனிக்கிழமை சிறப்பு

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். அந்தவகையில் தருமபுரியில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி கஷ்டங்கள் விலகி ஒளிமயமான வாழ்க்கை அமையும். மேலும் இன்றைய தினத்தில் அரிசி, பால், தயிர் போன்ற பொருட்களை தானம் செய்தால் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!