News April 4, 2025
ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டையில் பலத்த பாதுகாப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம், (ஆகஸ்ட் 15) அன்று நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
News August 14, 2025
ராணிப்பேட்டை: திமுக நிர்வாகி மறைவிற்கு அமைச்சர் அஞ்சலி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் திமுக மேற்கு ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பாலன் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
News August 14, 2025
ராணிப்பேட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.